ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற போது ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டது.
இதில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கான வாக்குகள் ஜூன் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இன்று சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஒடிசாவில் பாஜகவிற்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையேதான் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 74 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 18 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து, பிஜூ ஜனதா தளம் 57 சட்டப்பேரவை தொகுதியிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாய்க், கந்த்பன்ஜி தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதுவரை எண்ணப்பட்ட வாக்கு சுற்றுகளில் நவீன் பட்நாயக் 5,003 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை இழக்கிறாரா ஜெகன் மோகன் ரெட்டி?
