முதலில் சொன்ன மின்னம்பலம்.. தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் வழக்கு காரணமாக இதில் 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வந்தன. இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போதும் வெளியாகலாம் என்று நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசிதழில் அறிவிக்கை வெளியாகும் நாள் – 09.09.2026 (புதன்கிழமை)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 16.09.2026 (புதன்கிழமை)

ADVERTISEMENT

வேட்புமனு பரிசீலனை நாள் – 17.09.2026 (வியாழக்கிழமை)

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் – 19.09.2026 (சனிக்கிழமை)

வாக்குப்பதிவு நாள் – 06.10.2026 (செவ்வாய்க்கிழமை)

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் – 09.10.2026 (வெள்ளிக்கிழமை)

தேர்தல் நடைமுறைகளை முடிப்பதற்கான கடைசி நாள் -11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி இன்னும் ஒருமாதத்தில் இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கேட்டு முதல்வர் விஜய்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share