”முட்டாள்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை” : நடிகர் சூர்யா

Published On:

| By Kavi

சோசியல் மீடியாவில் ஒரு முட்டாள் பதிவு போட்டால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நாமும் முட்டாளாகி விடுவோம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது 20 வது திருமண ஆண்டை கொண்டாடினர்.

இன்னொரு பக்கம் சூர்யா தனது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்தி வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை கூட்டி அவர்கள் மத்தியில் பேசி வருகிறார்..

ADVERTISEMENT

அந்த வகையில் இன்று (செப்டம்பர் 26) சென்னை அருகே பரணிபுத்தூரில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய சூர்யா, “அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சோசியல் மீடியாவில் முட்டாள் ஒரு பதிவை போட்டான் என்பதற்காக அதற்கு நாமும் பதிலளிக்கும் போது தான் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் நாம் நாமாகவே இருப்போம். அவர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்து எதையாவது செய்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.

சில பேருக்கு புரியும். ஆனால் முக்கால்வாசி பேருக்கு புரியாது.

அதைப்பற்றி எல்லாம் யோசித்து உங்களுடைய எனர்ஜியை வேஸ்ட் செய்யாதீர்கள்.

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். இந்த உலகம் வேறு மாதிரி மாறிக்கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்கு பிடித்ததை தினம்தோறும் விடாமுயற்சியுடன் செய்தால் நிச்சயமாக அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு திரும்பத் திரும்ப நாம் அன்பை மட்டுமே கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணியின் வழக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவர் எந்தெந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் அப்போது எந்தெந்த முக்கிய விஐபிகள் உடன் இருக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு ஜெம் வீரமணி சென்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சூழலில்தான் முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொன்னால் நாமும் முட்டாள் ஆகி விடுவோம் என்று சூர்யா பதிலடி கொடுத்திருக்கிறார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share