நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 24-ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில்
- உதகமண்டலம்
- குன்னூர்
- கோத்தகிரி
- குந்தா
- கூடலூர்
- பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நீலகிரியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
