நீலகிரியில் 25 செ.மீ. பதிவு.. மேட்டுப்பாளையம்- உதகை சாலையில் பல இடங்களில் மண் சரிவு! அரசு பேருந்து சிக்கியது- மலை ரயில் ரத்து!

Published On:

| By Mathi

Nilgiri-Heavy Rain- Land Slide1

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பர்லியாறில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையம்–உதகை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்லியாறில் அதிகபட்சமாக 250 மில்லிமீட்டர், அதாவது 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள்:

  • பர்லியாறு (குன்னூர்) – 25 செ.மீ.
  • கீழ் கோத்தகிரி எஸ்டேட் – 20 செ.மீ.
  • அலக்கரை எஸ்டேட் – 16.1 செ.மீ.
  • கோத்தகிரி – 13.7 செ.மீ.

பர்லியாறில் அதிதீவிர கனமழையும், மற்ற 3 இடங்களில் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் பர்லியாறில் 25 செ.மீ. மழை பதிவாகியிருப்பது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் தீவிரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்- உதகை மலைப்பாதையில் மண்சரிவு

இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம்–உதகை மலைப்பாதையில் இன்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மணி சரிவில் தமிழக அரசுப் பேருந்தும் சிக்கி உள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. மணிசரிவில் சிக்கிய பேருந்தில் இருந்த 9 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த மண் சரிவால் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை நோக்கிச் செல்லும் வாகனங்களும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வரும் வாகனங்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share