திண்டுக்கல் மாநகராட்சி உட்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ.1.59 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு!

Published On:

| By Mathi

DVAC Raid-43 places

தமிழகம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்கள் உட்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8.21 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி-பே மூலம் நடைபெற்ற ரூ.1.50 கோடி சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக எழும் புகார்களின் பின்னணியில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 23-ந் தேதி) தமிழகம் முழுவதும் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரிகளுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எந்தெந்த அலுவலகங்களில் சோதனை?

  • மாநகராட்சி அலுவலகங்கள்
  • வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்
  • அரசு மருத்துவமனைகள்
  • ஊராட்சி அலுவலகங்கள்
  • நகராட்சி அலுவலகங்கள்
  • நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள்
  • துணை இயக்குநர்- சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள்
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்
  • பேரூராட்சி அலுவலகங்கள்
  • நகராட்சி பொறியியல் மற்றும் திட்டமிடல் பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனையின்போது உரிய கணக்கு காட்டப்படாத ரூ.8,21,750 ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், ஜி-பே மூலம் நடைபெற்ற ரூ.1,50,96,281 மதிப்பிலான சந்தேகத்துக்குரிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share