விஜய்க்கு நன்றி தெரிவித்த இண்டிகோ நிறுவனம்.. ஏன்?

Published On:

| By Mathi

Indigo-Vijay-Vat

தமிழக முதல்வர் விஜய்க்கு இண்டிகோ விமான நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் தமிழக அரசு அறிவித்துள்ள விமான எரிபொருள் மீதான வாட் வரிக் குறைப்புதான்.

சென்னை விமான நிலையத்தில் விமானங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் (Aviation Turbine Fuel – ATF) மீதான ’வாட்’ (மதிப்புக்கூட்டு) வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை நேற்று (அக்டோபர் 23-ந் தேதி) வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த வரிக் குறைப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2027 அக்டோபர் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் வாட் வரிக் குறைப்பு நடவடிக்கையை இண்டிகோ விமான நிறுவனம் வரவேற்றுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதல்வர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், தமிழகத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்” எனத் தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள் மீதான வாட் வரிக் குறைப்பால் விமான நிறுவனங்களுக்கான செலவு குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், பயணிகளுக்கான விமானக் கட்டணம் குறையுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share