VIDEO: நம்ம ‘சில்வர் பால்ஸ்’தானா இது? கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியை ‘வேற லெவலில்’ புரட்டியெடுத்த பெருமழை!

Published On:

| By Mathi

Kodaikanal-Silver Falls

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த பெருமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சியின் தற்போதைய தோற்றம் பிரமிக்க வைக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (அக்டோபர் 23-ந் தேதி) பெய்த பெருமழையால் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, நுழைவிடத்தில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் மழைநீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டியது. வழக்கமாக வெள்ளியை உருக்கி ஊற்றுவதைப் போலக் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி, பெருமழையால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், பெரும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காட்சியளித்தது.

இதனால் சாலைகளிலும் பெருவெள்ளம் பாய்ந்தோடியது. இப்பெருவெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் பெருமழையால் செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனிடையே வெள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டாறு கொட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share