SIT விசாரணை: ஜெம் வீரமணி மகள் அர்ச்சனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி?

Published On:

| By Mathi

Gem Veeramani-Daughter

போக்சோ வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணியின் மகள் அர்ச்சனா, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமிகளை சீரழித்த போக்சோ வழக்குகளில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா நேற்று (அக்டோபர் 23-ந் தேதி) சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.

பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் அவர் ஏறியிருந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் அவரை விமானத்திலிருந்து இறக்கினர். பின்னர் அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று இரவு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து கொண்டிருந்த போது அர்ச்சனா வீரமணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share