போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன்!

Published On:

| By Selvam

விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் 2021-ஆம் ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அஸ்மின், குணசேகரன், புஷ்பராஜ் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னை சேலையூரை சேர்ந்த லிங்கம் என்ற ஆதி லிங்கத்தை கடந்த வாரம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட  குணசேகரன் என்பவருக்கு பினாமியாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் லிங்கம் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதனால் வரலட்சுமியிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி விசாரணைக்கு ஆஜராக வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ஆஜராவதாக என்ஐஏ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

“தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா பகிர்ந்தளிக்க வேண்டும்”: துரைமுருகன்

ADVERTISEMENT

விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share