தமிழ்நாடு மாநில புதிய பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 15) ஆளுநரை சந்திக்க உள்ளார். new tnbjp president nainar nagendran meet rn ravi
கடந்த 4 ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவராக அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் கடந்த 13ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் நயினார்.
இந்த நிலையில் கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்முறையாகஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டி ராஜ்பவனில் இன்று சந்திக்க உள்ளார்.
அவருடன் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களான வானதி சீனிவாசன், சரஸ்வதி, காந்தி ஆகியோரும் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, திமுக ஆட்சி குறித்து புகார் மனுவையும் அளிக்க உள்ளார்.