வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Published On:

| By Mathi

Cyclone-Low Pressure

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் அதி தீவிர புயல் நேற்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது. இதையடுத்து புயல் வலுவிழந்து தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அந்தமான் கடலில் புதிய சுழற்சி

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது அக்டோபர் 29-ந் தேதிக்குள், அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அடுத்த புயலாக மாறுமா?

புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்து எந்தத் திசையில் நகரும்? மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ புயலாகவோ மாறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 1-ந் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி வரக்கூடும் என்று கணித்துள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்றோ, தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்றோ இந்திய வானிலை ஆய்வு மையம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share