தமிழ்நாட்டில் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தது முதல் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்த உத்தரவில்,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த எஸ் பி கார்த்திகா சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் செயலாளராகவும்,
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் வளர்மதி அயல்நாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனராகவும்,
அயல்நாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனர் சதீஷ் பட்டு வளர்ச்சி துறை (சேலம்) இயக்குனராகவும்,
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, தென்காசி மாவட்ட ஆட்சியராகவும்,
கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும்
ஆளுநரின் (பல்கலைக்கழகங்கள்) துணைச் செயலாளர் பிரசன்ன ராமசாமி கரூர் மாவட்ட ஆட்சியராகவும்,
கோயம்பேடு மார்க்கெட் மேலாண்மை குழு முதன்மை நிர்வாக அதிகாரி இந்துமதி போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் ஆகவும்,
சென்னை மாநகராட்சி அம்மா உணவக மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனராகவும்,
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் -10, காளிதாஸ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் இயக்குனராகவும்,
கரூர் கோட்ட உதவி ஆட்சியர் வெங்கடேஸ்வரன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டம் உதவி ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனராக இருந்த சாந்தி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் எஸ் நர்ணாவே, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனராகவும்,
தர்மபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா சேலம் SAGOSERVE நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும்
தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எல்காட்- பொது மேலாளர் ராஜ கிருபாகரன் எல்காட் செயல் இயக்குனராகவும்
இ கவர்னன்ஸ் இயக்கத்தின் இணை இயக்குனர் பிரியா திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும்,
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக பொது மேலாளர் மணிமேகலை தமிழ்நாடு நீர் பிடிப்பு பகுதி மேம்பாட்டு முகமையின் துணை தலைவராகவும்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்கத்தின் இணை இயக்குனர் மீனா பிரியதர்ஷினி, குன்னூரில் உள்ள INDCOSERVE( தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழில் கூட்டுறவு தொழிற்சாலைகள் இணையம்) நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்.
சென்னை நெடுஞ்சாலைத்துறை (நிலம் எடுப்பு) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும்,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தின் இணை ஆணையர் சாந்தி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
