தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா… சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

Published On:

| By Kavi

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூர் வரை, தாம்பரம் முதல் நாகர்கோயில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்ட்ரல் டு போத்தனூர் 

ADVERTISEMENT

வரும் நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போத்தனூருக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். 

பின்னர் நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயல் மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். 

ADVERTISEMENT

22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 3 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்கள் இருக்கும். 

அதுபோன்று தாம்பரத்திலிருந்து  வரும் நவம்பர் 6ஆம் தேதி 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். 

ADVERTISEMENT

நாகர்கோயிலில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் 11.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share