தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Published On:

| By Pandeeswari Gurusamy

monitoring officers appointed

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள் கிழமை நவம்பர் 9ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் நவம்பர் 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், பண்டிகையை முடித்துவிட்டு திங்கட்கிழமை உடனடியாகப் பணிக்கும், பள்ளிகளுக்கும் திரும்புவதில் சிரமம் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இதனைக் கருத்தில் கொண்டு, சொந்த ஊர் சென்றவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு சிரமமின்றி பணியிடங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்புவதற்கு ஏதுவாக, நவம்பர் 9-ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசுப் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து வெயிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகை 8.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 9.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தொடர்பான ஆணை

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share