விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் காமராஜரின் பேத்தி மயூரி என்பவர் இணைந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இவர்களில் காமராஜர் பேத்தி என மயூரி என்பவரும் தவெகவில் இணைந்தார்.
ஆனால் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை வழி பேரன் காமராஜ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக காமராஜ் கூறியதாவது:
- காமராஜரின் தந்தை குமாரசாமியை தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மயூரி.
- மயூரி, காமராஜர் குடும்பத்துடன் ரத்த தொடர்பு உள்ளவர் இல்லை.
- காமராஜர் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்
இவ்வாறு காமராஜ் கூறியுள்ளார்.
