நேபாள பேரழிவு வெள்ளம்: 95 உடல்கள் மீட்பு: 600-க்கும் மேற்பட்டோர் பேர் கதி?

Published On:

| By Mathi

Nepal Devastating Floods: 95 Bodies Recovered, Fates of Over 600 Missing Uncertain

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரழிவில் இருந்து 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 44 நேபாள ராணுவ வீரர்கள், 391 சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியவில்லை.

திபெத்- நேபாள எல்லையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பனி ஏரிகள் வெடித்தும் மலைப்பாறைகள் சரிந்தும் நதிகளில் பெரு வெள்ளம் பாய்ந்தோடியது. இதில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் மண்ணுக்குள் புதைந்தும் போயின.

ADVERTISEMENT

உலகையே பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ள இந்த இயற்கை கோரத்தாண்டவத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 95 உடல்கள் வெள்ள சகதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும்

ADVERTISEMENT
  • நேபாள ராணுவ வீரர்கள் – 44
  • காவல்துறை அதிகாரிகள் – 28
  • ஆயுதப் படை வீரர்கள் – 13
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 391
  • நேபாளிகள்- 93
  • நீர்மின் நிலைய ஊழியர்கள்- 60

என மொத்தம் 629 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை என நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாள பேரழிவு பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share