நேபாளத்தில் இயற்கை பேரழிவின் ருத்ரதாண்டவ காட்சிகள் உலகையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இமயமலை நாடான நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பு காரணமாக கனமழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; அதேபோல பனி ஏரிகள் வெடிப்பு காரணமாகவும் (Glacial Lake Outburst Floods) பெருவெள்ளம் ஏற்பட்டு உலகம் இதுவரை காணாத மிகப் பேரழிவை நேபாளம் எதிர்கொண்டிருக்கிறது.
இந்த பெருவெள்ளத்தின் கோர காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன.
