பருவமழை எதிரொலி: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

chennai corporation alert dont pay parking fee

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மண்டத்திற்கும் தலா 1 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ரூ.42 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 5 மாவட்டங்களில் உள்ள 202 இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ADVERTISEMENT

மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்

  • மண்டலம் 1. திருவொற்றியூர் – கே. பாலசுப்பிரமணியம்
  • மண்டலம் 2. மணலி – பி. குமரவேல் பாண்டியன்
  • மண்டலம் 3. மாதவரம் – எஸ். அருண்ராஜ்
  • மண்டலம் 4. தண்டையார்பேட்டை – ஆர். கண்ணன்
  • மண்டலம் 5. ராயபுரம் – ஆஷா அஜித்
  • மண்டலம் 6. திரு.வி.க. நகர் – பி. கணேசன்,
  • மண்டலம் 7. அம்பத்தூர் – கே. விவேகானந்தன்,
  • மண்டலம் 8. அண்ணாநகர் – பி. காயத்ரி கிருஷ்ணன்
  • மண்டலம் 9. தேனாம்பேட்டை – டி. கிறிஸ்துராஜ்
  • மண்டலம் 10. கோடம்பாக்கம் – எஸ். கோபால சுந்தர ராஜ்
  • மண்டலம் 11. வளசரவாக்கம் – டாக்டர் ஜெ. விஜயா ராணி
  • மண்டலம் 12. ஆலந்தூர் – வாகே சங்கெத் பால்வந்த்
  • மண்டலம் 13. அடையாறு – டாக்டர் கே. செந்தில் ராஜ்
  • மண்டலம் 14. பெருங்குடி – மகேஸ்வரி ரவிக்குமார்
  • மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன்
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share