‘லீவு விடலனா கலெக்டர் ஃபெயில்!’ – எமோஷனல் பிளாக்மெயில் செய்த மாணவர்களுக்கு ஆட்சியர் பதில்!

Published On:

| By Kavi

பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ‘புக்கை பார்த்து படிங்க’ என்று நெல்லை ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் நெல்லையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை நெல்லையில் ஆங்காங்கே நல்ல மழை பெய்த நிலையில், அம்மாவட்ட பள்ளி மாணவர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர். 

அவர்களது ஒவ்வொரு கோரிக்கையும், அனைவரையும் கவரும் வகையில் இருந்தன. 

ADVERTISEMENT

சார், ப்ளீஸ் மாணவர்களின் சேப்டிக்காக லீவு விடுங்க… கெஞ்சி கேட்கிறோம் சார் லீவு விடுங்க… வீட்டுக்கு உள்ளேயே நீச்சல் குளம் போல் தண்ணீர் நிற்கிறது…. நீங்கள் எங்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்றால் எங்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம்… ஆட்சியராக நீங்கள் தோல்வியடைந்ததாக அர்த்தம்… ஒருமுறை எங்கள் பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்காக நீங்கள் தாமதமாக வந்தீர்கள், பள்ளி நிர்வாகம் உங்களை மன்னித்தது. ஆனால் நாங்கள் மன்னிக்கவில்லை. உங்களை மன்னிக்க வேண்டும் என்றால் அக்டோபர் 26 ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை விடுங்கள் என்று ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக ஆட்சியருக்கு  இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

இதுபோன்று தொடர்ந்து மெசேஜ்கள் குவிந்த நிலையில் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாணவர்களுக்கு பதிலளித்துள்ளார். 

ADVERTISEMENT

அதில், 

ஆனா இங்க சில பேரு ‘லீவு விடலனா கலெக்டராவே ஃபெயில்’, ‘பர்த்டேவே டெத் டே’, ‘ரொம்ப டிப்ரஷனா இருக்கு’னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்கார் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ… உங்க கஷ்டம்லாம் புரியுது. ஆனா இந்த ஓவர் ஆக்டிங் தான்டா தாங்க முடியல!

கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி! மழை வந்தா நான் பாத்துக்கிறேன். இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க!” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share