வங்கக்கடல் புயல்: தமிழ்நாட்டுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்!

Published On:

| By Mathi

Tamil Nadu-Orange Alert

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 26) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடல் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை முதல் அதிதீவிர கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழ்நாட்டின் சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share