கனமழை எதிரொலி.. திண்டுக்கல், கோவை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. புதுச்சேரி, காரைக்காலிலும் லீவ்!

Published On:

| By Mathi

Dindigul Holiday

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். இந்த விடுமுறை பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்திலும் விடுமுறை

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. கோவை மாநகரின் பல பகுதிகளிலும் மழை வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, அக்டோபர் 26 அன்று திண்டுக்கல், கோவை மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள் இயங்காது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share