VIDEO: அமித்ஷா அலுவலகம் இருக்கும் டெல்லி நார்த் பிளாக்கில் திடீர் தீ விபத்து.. கரும்புகையால் பதற்றம்!

Published On:

| By Mathi

Delhi North Block-Fire Accidentடெ

டெல்லியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்தில் இன்று (அக்டோபர் 26) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி நார்த் பிளாக் கட்டிடத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல முக்கியமான அலுவலகங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இந்த நார்த் பிளாக் கட்டிடத்தில் இன்று காலை வெல்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது வெல்டிங் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறிகள் அருகில் இருந்த ஃபைபர் தொட்டியில் பட்டதால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டிடத்தில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து டெல்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விபத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share