99% மாணவர்களுக்கு பிரஸ்ட் சாய்ஸ் சிட்டி
நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (National Eligibility cum Entrance Test – NEET UG) 2026 தேர்வுக்கான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency – NTA) வெளியிட்ட தகவலின்படி, சுமார் 99.2% மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த முதல் நகரம் (first choice exam city) வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பயணம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சிக்கலை குறைக்கும் பெரிய ரிலீஃப் ஆக பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் 3 நகரங்களை (3 preferred cities) தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது அவர்களின் நிரந்தர முகவரி அல்லது தற்போதைய முகவரி மாநிலத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. என்டிஏ நிர்வாக, தொழில்நுட்ப வசதிகள் அடிப்படையில் இறுதி மையங்களை ஒதுக்குகிறது.
அட்மிட் கார்டு (Admit Card) வெளியீடு வரும் ஏப்ரல் 26, 2026 அன்று அதிகாரப்பூர்வ தளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த அட்மிட் கார்டில் தேர்வு மையம் முழு முகவரி, ரோல் நம்பர் (Roll Number), தேர்வு நேரம் போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெறும்.
தேர்வு தேதி மற்றும் நேரம்
நீட் யுஜி 2026 தேர்வு மே 3, 2026 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆஃப்லைன் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்bஏப்ரல் 12 அன்று “சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் (City Intimation Slip)” வெளியிடப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு நகரத்தை தெரிந்து கொண்டனர்.
என்டிஏ கூறுவது என்னவென்றால், எல்லோருக்கும் விருப்பமான நகரம் கொடுக்க முயற்சி செய்யப்படும், ஆனால் சில நேரங்களில் வேறு நகரம் ஒதுக்கப்படலாம் என்பதால் மாணவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நீட் யுஜி 2026-ல் 99% மாணவர்களுக்கு முதல் தேர்வு நகரம் கிடைத்தது என்பது பெரிய பாசிடிவ் அப்டேட். அதோடு ஏப்ரல் 26 அட்மிட் கார்டு வெளியீடு, தேர்வுக்கான final phase-ஐ தொடங்குகிறது. நண்பர்களே இப்பொழுதிலிருந்தே தேர்வுக்கு தயாராக தொடங்குங்கள்.
