சி.பி.எஸ்.இ 3 மொழி விதி: இந்திய மொழிகள் முன்னிலை

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse third language rule french german indian languages impact

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education – CBSE) 2026-27 கல்வியாண்டு முதல் 3 மொழி முறை (Three Language Formula) அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றம் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy – NEP 2020) மற்றும் புதிய பாடத்திட்ட வடிவமைப்பு (NCFSE 2023) அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

புதிய விதிப்படி 6ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் 3 மொழிகள் படிக்க வேண்டும், இதில் குறைந்தது 2 இந்திய மொழிகள் கட்டாயம், ஆங்கிலம் (English) ஒரு வெளிநாட்டு மொழி (Foreign Language) ஆக கருதப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு பல CBSE பள்ளிகளில் பிரெஞ்ச் (French), ஜெர்மன் (German) போன்ற வெளிநாட்டு மொழிகள் அதிகமாக கற்பிக்கப்பட்டன. இப்போது இந்த மொழிகள் முழுக்க நீக்கப்படவில்லை ஆனால் அவை மூன்றாவது விருப்பமாக மட்டும் இருக்கும். அதோடு சேர்த்து 2 இந்திய மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதால், வெளிநாட்டு மொழிகளின் முக்கியத்துவம் குறையலாம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
பள்ளிகளுக்கு என்ன சவால்?

இந்த புதிய விதி காரணமாக மொழி ஆசிரியர்கள் குறைபாடு, மாணவர்களுக்கு சரியான மொழி தேர்வு வழிகாட்டல், பாடச்சுமை அதிகரிப்பு போன்ற சிக்கல்கள் உருவாகி உள்ளன. மேலும், சில பள்ளிகள் முன்பு வழங்கியிருந்த foreign language combinations-ஐ மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சில பெற்றோர்கள் CBSE syllabus கடினமாகிறது, மொழி தேர்வு சிக்கலாகிறது என்று கவலை தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் காரணமாக சிலர் வேறு கல்வி வாரியங்களைப் பற்றியும் யோசித்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ஏன் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது?

இந்த 3 மொழி விதியின் நோக்கம், இந்திய மொழிகளை பாதுகாப்பது, பல மொழி திறனை வளர்த்தல், கலாச்சார இணைப்பை வலுப்படுத்தல் என்பதாகும்.

CBSE 3 மொழி விதி மூலம் பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகள் நீக்கப்படவில்லை என்றாலும், இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதனால் பள்ளிகளும், மாணவர்களும் புதிய மாற்றத்திற்கு அட்ஜஸ்ட் ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share