ADVERTISEMENT

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு 2ஆவது போர்டு தேர்வு 2026: ஏப்ரல் 22 கடைசி தேதி

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse class 10 second board exam 2026 loc window april 22

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு 2வது போர்டு தேர்வுக்கான (Second board exam) List of Candidates (LOC) விண்டோவை திறந்துள்ளது.

இந்த விண்டோ மூலம், மாணவர்கள் 2ஆவது தேர்வில் கலந்து கொள்ள பதிவு செய்யப்படுகின்றனர்.

ADVERTISEMENT

LOC (List of Candidates) என்பது தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல், பள்ளிகள் மூலம் சி.பி.எஸ்.இக்கு அனுப்பப்படும் பதிவு தகவல் என்பதாகும்.

இந்த செயல்முறை இல்லாமல் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20 முதல் 22 வரை (கட்டங்களாக முடிவு)

இதனால், பள்ளிகளும் மாணவர்களும் உடனடியாக செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

ADVERTISEMENT
யார் இந்த தேர்வில் எழுதலாம்?

இந்த 2வது போர்டு தேர்வு 2026 முக்கிய (Main) தேர்வில் எழுதிய மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்களை மேம்படுத்த (Improvement) விரும்புவோருக்கு உகந்ததாகும்.  மாணவர்கள் அதிகபட்சம் 3 பாடங்களில் மட்டும் மீண்டும் தேர்வு எழுத முடியும்.

தேர்வு எப்போது நடைபெறும்?

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு 2ஆவது போர்டு தேர்வு மே 15 முதல் ஜூன் 1, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு, மாணவர்களுக்கு “second chance” வழங்கும் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த புதிய முறை?

2026 முதல் அறிமுகமான Two Board Exam System மூலம் மாணவர்களின் தேர்வு அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஒரு தவறால் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மதிப்பெண் மேம்படுத்த கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LOC பதிவு பள்ளிகள் மூலம் மட்டுமே செய்யப்படும், தவறுகள் இருந்தால் திருத்த வாய்ப்பு குறைவு. எனவே, சரியான விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு 2வது போர்டு தேர்வுக்கான LOC விண்டோ திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 22க்குள் பதிவு முடிக்க வேண்டும் என்பது முக்கிய அறிவுறுத்தலாகும். மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share