ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (Joint Entrance Examination – JEE Main) 2026 ரிசல்ட்டில், மொத்தம் 26 மாணவர்கள் 100 பர்சென்டைல் (100 percentile) பெற்றுள்ளனர். இந்த சாதனை, இந்த ஆண்டின் கடும் காம்பிடிஷன் (competition) நிலையை வெளிப்படுத்துகிறது.
இந்த 26 டாப்பர்கள் (toppers) குறித்து பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இந்த 26 பேரும் ஆண்கள் (male candidates) மட்டுமே, ஒரு பெண் மாணவரும் 100 பர்சென்டைல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் மாணவர்களில் தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஒருவர், சுமார் 99.998 பர்சென்டைல் (percentile) வரை பெற்றுள்ளார், ஆனால் 100 பர்சென்டைல் எவருக்கும் கிடைக்கவில்லை.
எந்த மாநிலங்கள் முன்னிலை?
இந்த 100 பர்சென்டைல் பெற்ற மாணவர்கள் தெலுங்கானா & ஆந்திரப் பிரதேசத்திலிருந்து அதிகம். மேலும் ராஜஸ்தானிலிருந்து 4 பேர், டெல்லியிலிருந்து 3 பேர், மகாராஷ்டிரா, ஹரியானாவிலிருந்து தலா 2 பேர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சுமார் 15.3 லட்சம் மாணவர்கள் (15.3 lakh candidates) தேர்வில் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும் டாப்பர் பட்டியலில் அவர்கள் இடம்பெறாதது கவனிக்கப்படுகிறது.
100 பர்சென்டைல் பெற்றவர்களில் 24 பேர் ஜெனரல் (General category), 1 இ.டபிள்யூ.எஸ் (EWS), 1 ஓ.பி.சி (OBC-NCL), என்பது தெரியவந்துள்ளது.
இந்த ரிசல்ட் மூலம் டாப்பர் லெவலில் காம்பிடிஷன் மிக அதிகம், பாலின இடைவெளி (gender gap) இன்னும் உள்ளது என்பது தெளிவாகிறது.
ஜேஇஇ மேன் 2026ல் 26 பேர் 100 பர்சென்டைல் பெற்றது ஒரு பெரிய சாதனை என்றாலும், ஒரு பெண் மாணவரும் அந்த பட்டியலில் இல்லை என்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
