ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (Joint Entrance Examination – JEE Main) 2026 ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்-ஆஃப் பர்சென்டைல் (cut-off percentile) அதிகரித்துள்ளது என்பது முக்கிய அப்டேட்டாக வெளியாகியுள்ளது.
போட்டி அதிகரித்ததால், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குவாலிஃபை செய்ய வேண்டிய பர்சென்டைல் (qualifying percentile) உயர்ந்துள்ளது.
பிரிவு வாரியாக கட்-ஆஃப்
இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப்:
- ஜெனரல் (General): சுமார் 93.4+ பர்சென்டைல் (percentile)
- இ.டபிள்யூ.எஸ் (EWS): சுமார் 82+ பர்சென்டைல்.
- ஓ.பி.சி (OBC): சுமார் 80+ பர்சென்டைல்
- எஸ்.சி (SC): சுமார் 63+ பர்சென்டைல்
- எஸ்.டி (ST): சுமார் 52+ பர்சென்டைல்
இந்த மதிப்புகள் கடந்த ஆண்டுகளை விட சிறிய அளவில் உயர்ந்துள்ளன.
இந்த ஆண்டு கட்-ஆஃப் அதிகரித்ததற்கான காரணங்கள் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு, ஒவர்ஆல் பெர்ஃபார்மன்ஸ் (overall performance) மேம்பாடு, மோடரேட் டிஃபிகல்டி லெவல் (moderate difficulty level) என்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஇ அட்வான்ஸ்ட்க்கு யார் தகுதி?
ஜேஇஇ அட்வான்ஸ்ட் (JEE Advanced) தேர்வுக்கு டாப் 2.5 லட்சம் மாணவர்கள் (Top 2.5 lakh candidates) மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். பிரிவு அடிப்படையில் (category-wise) shortlist தயாராகும் என்பது அதிகாரப்பூர்வ விதிமுறை.
ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுத சுமார் 100 – 115 மார்க்ஸ் (marks out of 300) தேவைப்படலாம். இது பர்சென்டைல் அடிப்படையில் மாறுபடும் என்பது நிபுணர்கள் கூறும் தகவல்.
ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுத ஜெனரல் / ஓ.பி.சி: 75% மார்க்ஸ் (Class 12), எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.டி: 65% மார்க்ஸ் அல்லது டாப் பர்சென்டைல் (top percentile) அடிப்படையில் தகுதி பெற வேண்டும்.
இந்த ஆண்டு காம்பிடிஷன் (competition) அதிகமாக இருப்பதால் பர்சென்டைல் மட்டும் போதாது, ரேங்க் (rank) முக்கியம் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஜேஇஇ மேன் 2026 கட்-ஆஃப் உயர்ந்திருப்பது, இந்த ஆண்டு போட்டி மிக அதிகமாக இருந்ததை காட்டுகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்ட் செல்லும் வாய்ப்பு பெற, மாணவர்கள் அதிக பர்சென்டைல் மற்றும் நல்ல ரேங்க் பெற வேண்டிய அவசியம் உள்ளது.
