மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education – CBSE) 2026ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு 2வது போர்டு தேர்வு (Second Board Exam) டேட் ஷீட்டை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுகள் மே 15, 2026 முதல் தொடங்கி மே இறுதி / ஜூன் தொடக்கம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2ஆவது தேர்வு, மாணவர்கள் தங்களின் மார்க்ஸ் மேம்படுத்திக் கொள்ளும் “இம்ப்ரூவ்மென்ட் வாய்ப்பு (improvement opportunity)” ஆக கருதப்படுகிறது.
முக்கிய தேர்வு தேதிகள்
- மே 15 – மேத்தமெடிக்ஸ் (Mathematics – Standard / Basic)
- மே 19 – சயின்ஸ் (Science)
- மே 22 – சோஷியல் சயின்ஸ் (Social Science)
- மே 26 – லாங்க்வேஜ் பேப்பர்கள் (Language Subjects).
இதற்கிடையில் கம்பார்ட்மெண்ட் சப்ஜெக்ட்ஸ் (Compartment Subjects) பல நாட்களில் நடைபெறும்.
பெரும்பாலான தேர்வுகள் காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை நடைபெறும். சில சப்ஜெக்ட்களில் நேரம் மாறுபட வாய்ப்பு உள்ளது.
யார் இந்த தேர்வு எழுதலாம்?
இந்த 2ஆவது போர்டு தேர்வு முதல் தேர்வில் (Phase 1) எழுதிய மாணவர்கள், மார்க்ஸ் மேம்படுத்த விரும்பும் மாணவர்கள், கம்பார்ட்மெண்ட் (compartment) மாணவர்கள் எல்லோருக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையில் இரண்டு தேர்வில் எது நல்ல ஸ்கோர் (best score) வந்ததோ, அதையே இறுதி ரிசல்ட்டாக (final result) எடுத்துக் கொள்ளப்படும் என்பது மாணவர்களுக்கு பெரிய ரிலீஃப் ஆக இருக்கிறது.
இந்த 2ஆவது தேர்வு முறை தேர்வு அழுத்தம் (exam pressure) குறைக்கும், மாணவர்களுக்கு ஒரு அறிய செகண்ட் சான்ஸ் ஆக இருக்கும் என்பதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு 2ஆவது போர்டு தேர்வு 2026, மே 15 முதல் தொடங்குவது மாணவர்களுக்கு ஒரு முக்கிய செகண்ட் சான்ஸ் ஆகும்.
