நாட்டின் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (Neet) எதிர்ப்பு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ (Balan Illam) இரவு பகலாக நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை பாலன் இல்லத்தில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’யினர் நீட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று ஜூலை 23-ந் தேதி அதிகாலையிலும் சென்னை பாலன் இல்லத்தில் பெருந்திரளான மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று கூடி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
