பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் (வயது 75) இன்று (அக்டோபர் 8) அதிகாலை காலமானார்.
இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் புகழ்பெற்றவர் நானா படேகர். கோவாவில் வசித்து வந்த நானா படேகருக்கு இன்று அதிகாலை கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சென்றபோது நானா படேகர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
உடனடியாக கோவாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுமார் 45 நிமிடங்கள் மருத்துவர்கள் தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளித்தும் பலனின்றி, அதிகாலை 5.20 மணியளவில் நானா படேகர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
1951-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர். 1978-ம் ஆண்டு வெளியான கமன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பரிந்தா, கிராந்திவீர், அக்னி சாக்ஷி, அப்தக் சப்பன், வெல்கம், நட்சம்ராட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
சிறந்த நடிப்புக்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள நானா படேகருக்கு, 2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
பாரதிராஜாவுடன் நானா படேகர்

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படத்தில் ராணா என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தவர் நானா படேகர்.

ரஜினியுடன்..
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் ஹரி தாதா- ஹரிதேவ் அபயங்கர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நானா படேகர். அவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
