தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பேசிய முதல்வர் விஜய், ”எங்க உங்க அப்பாவ காணோம்’ என முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”சட்டப்பேரவையில போய்ட்டு அப்பா எங்க அப்பா எங்கனு தேடுனா எப்படி தெரியும்?. வீட்ல போய்ட்டு அம்மா கிட்ட கேட்டா தான அப்பா யாருனு தெரியும்” என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாஜக நிர்வாகி குஷ்புவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தனது பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்” என பதிவிட்டுள்ளார்.
