இன்று சுதந்திர தின விழாவில் அரங்கேறியது வெட்கம்கெட்டத்தனம் என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் 80ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கோட்டையில் முதல்முறையாக முதல்வர் விஜய் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜயின் தாய் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து நடிகை திரிஷா தனது அம்மாவுடன் கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த சூழலில் நடிகை கஸ்தூரி, சுதந்திர தின விழாவில் இன்று நடந்தது வெட்கம்கெட்டத்தனம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான் .நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று பதிவிட்டுள்ளார்.
