தற்குறி யார்?…ஃபீல் பண்ணுவீங்க… மை டியர் அங்கிள்: விஜய் பேச்சு!

Published On:

| By Kavi

கரூரில் நிகழ்ந்த கோரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான். ஒன்னு சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டான். 

ADVERTISEMENT

அது மக்களுக்கு நன்றாக தெரியும். அப்புறம் ஒரு கண்டுபிடிக்க முடியாத உண்மை… என்னப்பா அது தற்குறியா? 

நமது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் லட்சக்கணக்கான மக்கள், நண்பா நண்பிகள், ஜென்சி கிட்ஸ் என எல்லோரையும் தற்குறிகள் என்று சொல்லி வாங்கி கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தற்குறி எல்லாம் கிடையாது அப்படி சொல்லாதீர்கள், சங்கிகளும் கிடையாது அப்படி சொல்லாதீர்கள் என்று ஒரு குரல் வருகிறது. 

ADVERTISEMENT

யாருடா அந்த குரல் என்று பார்த்தால், இப்போது சமீபமாக அறிவு திருவிழா என்று ஒன்றை நடத்தினார்களே… சாரி அவதூறு திருவிழா… அதில் அவர்களது தலைமையையே குழப்புற மாதிரி, அறிவுக்கண்ணை திறந்து வைப்பது மாதிரி ஒருத்தர் பேசி இருக்கிறார். அது யார் என்றால் அவர்களுடைய எம்எல்ஏக்களில் ஒருவர் தான். 

அந்த எம்எல்ஏ யார் என்றால், நம்முடைய கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர். 

ADVERTISEMENT

அவர்களது கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சப்போர்ட் செய்வது போல் ஒரு குரல் வருகிறதே என்று தலைமையே கன்ஃப்யூஷனில் இருக்கிறது. இந்த கன்ஃபியூஷன் இதோடு நிற்காது. அந்த ஆதரவு குரல் ஒரு வீடு விடாமல், ஒரு இடம் விடாமல் எல்லா இடத்திலேயும் பலமாக எதிரொலிக்கும். எதிரொலிக்கிறதா இல்லையா என்று பாருங்கள். 

சும்மா பிளாஸ்ட் பிளாஸ்ட் தான்…

இது இன்று நேற்று நடக்கவில்லை. 1972 லேயே நடந்து விட்டது.. எப்போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே அது கூத்தாடி கட்சி என்றார்கள். 

எம்ஜிஆர் பின்னால் அத்தனை மக்கள் திரண்டு நின்றபோது அது கூத்தாடி கும்பல், நடிகர் கட்சி என்றார்கள். 

நடிகர் கட்சி என்று சொன்ன ஒருவர் பின்னர் அவருடனே சென்று சேர்ந்தார். 

இவர் எல்லாம் ஒரு ரவுண்டு தான் வருவார், இரண்டாவது ரவுண்டில் காணாமல் போய்விடுவார் என்று எம்ஜிஆரை சொன்னவர் அவருடனே சென்று சேர்ந்தார். 

இதெல்லாம் வரலாறு. அவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் நன்றாகவே தெரியும். அதனால்தான் 53 ஆண்டுகளாக, கூத்தாடி, கூத்தாடி கூட்டம்என விமர்சிக்கிறார்கள். 

மர்மயோகி என்ற படத்தில் கரிகாலன் என்ற பெயரில் நடித்த எம் ஜி ஆர் சூப்பர் டயலாக் ஒன்றை சொல்லி இருப்பார். 

குறி வைத்தால் தவறமாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்பார். இதெல்லாம் யாருக்கு சொல்கிறோம் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். 

ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏண்டா விஜய் கூட இருக்கும் அந்த மக்களை தொட்டோம் என்று நினைத்து நினைத்து பீல் பண்ண போகிறீர்கள். 

நமக்கு இந்த அரசியல் புரிதல் இல்லை என்கிறார்கள். நான் கேட்கிறேன் மக்கள் எல்லாம் உங்களுக்கு தற்குறிகளா. அதே மக்களிடம் இருந்து ஓட்டு வாங்கப் போகிற நாம் தற்குறிகள் என்றால், அவர்களிடமிருந்து தானே நீங்களும் ஓட்டு வாங்கிக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் யார்? 

இந்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இது தானா. ஒன்று மட்டும் சொல்கிறேன்,  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தற்குறி தற்குறி என்று சொல்கிறீர்களே… இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான், வாழ்நாள் முழுவதும் விடையை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலையே கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். 

இவர்கள் எல்லாம் தற்குறிகள் கிடையாது. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறி. மாற்றத்திற்கான அறிகுறி. 

நண்பா நண்பிகளே, எப்போதும் சொல்வதுதான் நீங்களே சொல்லுங்கள்… ஒன்று டிஎம்கே மற்றொன்று டிவிகே.

மை டியர் சார், மை டியர் அங்கிள் ஆல்ரெடி டிசைட் பண்ணியாச்சு. வெற்றி நிச்சயம்” என்று தனது உரையை முடித்தார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share