திமுகவுக்கு தாவிய மதிமுக முத்துரத்தினம்- ‘அலேக்காக’ தூக்கிய செந்தில் பாலாஜி!

Published On:

| By Minnambalam Desk

MDMK DMK Senthil Balaji

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். DMK MDMK Senthil Balaji

மதிமுகவில் துரை வைகோ தலையெடுப்பதற்கு முன்பு வரை. சென்னையை விட்டு வைகோ மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் பயணமாக வெளியே புறப்பட்டால் முத்துரத்தினம், டிரைவருடன் காரை வைகோவுக்கு அனுப்பி விடுவார். மீண்டும் மதுரை விமான நிலையமோ கோவை விமான நிலையமோ வைகோ புறப்படும் வரையில் அந்த காரும் டிரைவரும் வைகோவுடன் இருப்பார்.

ADVERTISEMENT

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் நெருங்கிய வட்டாரத்தில் முத்துரத்தினம் இருப்பதை அறிந்த துரை வைகோ, அவரை ஓரங்கட்டினார். வைகோவுக்கு காரும் டிரைவரும் அனுப்ப வேண்டாம் என சில வருடங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டார் துரை வைகோ.. திருப்பூரில் பின்னலாடை தொழில் செய்கிறார் முத்துரத்தினம். முத்துரத்தினத்தின் தந்தை கந்தசாமி, ஒருங்கிணைந்த திமுகவில் பொங்கலூர் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தவர்.

துரை வைகோ மீதான அதிருப்தி காரணமாக ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் மதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தொடர்பான விழாவில் கலந்து கொண்டு தனக்கும் மதிமுகவுக்குமான தூரம் அதிகமாகி விட்டதை உணர்த்தினார் முத்துரத்தினம்.

ADVERTISEMENT

முத்துரத்தினத்துடன் திமுகவின் கோவை மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பேசி வந்தார். திமுக தலைமையிடம் ஏற்கனவே முத்துரத்தினம் பற்றி தெரிவித்து இருந்தார் செந்தில் பாலாஜி. மதிமுகவில் இருந்து பலர் திமுகவில் சேர தயாராக அணுகிய போதும் வேண்டாம் என தள்ளிப் போட்ட முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல் அளித்துள்ளார். அதன்படியே செந்தில் பாலாஜி முதல் கட்டமாக முத்து ரத்தினத்தை அறிவாலயத்துக்கு அழைத்து வந்து விட்டார் என்கிறார்கள் மதிமுகவினர்.

மல்லை சத்யா, மறைந்த முராத் புகாரி, திருப்பூர் முத்து ரத்தினம், திருச்சி இளமுருகு ஆகியோர் மதிமுகவில் இளைஞர் அணியை தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share