எம்.எல்.ஏ. மீதான கொலை வழக்கு! சாட்சியமளிக்க வராத முன்னாள் நீதிபதிக்கு பிடிவாரண்ட்!

Published On:

| By vanangamudi

Murder case Arrest warrant issued for judge

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராமச்சந்திரன் தொடர்பான வழக்கில், சாட்சி சொல்ல வராத நீதிபதிக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

என்ன வழக்கு இது? Murder case Arrest warrant issued for judge

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் என்,சி.ராமன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், தளி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவர்.

அரசியல் காரணங்களுக்காக 1992 ஆம் ஆண்டு, என்.சி.ராமன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை செய்து, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ராமனின் தம்பி, என்.சி.சந்திரசேகரன் கொலையை நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அடுத்தடுத்து கொலை Murder case Arrest warrant issued for judge

1995, ஆகஸ்டு 15 அன்று, மதியம் 12.40 மணிக்கு, ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு பேருந்து ஏறச் சென்ற சந்திரசேகரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. ஓசூர் பேருந்து நிலையத்தில் படுகாயமடைந்து கிடந்த சந்திரசேகரனை அவரது மனைவி சரசம்மாள் மற்றும் தம்பி ஜெயசங்கர் இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் நகர காவல் ஆய்வாளராக இருந்த ராமதாஸ், சிகிச்சையிலிருந்த சந்திரசேகரனிடம் விசாரணை செய்தார்.

எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்

மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சந்திரசேகரன், ஓசூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் எஸ்.முத்துராஜிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலத்தில், தளி ராமச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோர்தான் தன்னை சரமாரியாகத் தாக்கியதாக கூறியிருந்தார். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த ஓரிரு நாள்களுக்குப் பிறகு, சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஓசூர் நகர காவல் நிலைய ஆய்வாளர், ஓசூர் டி.எஸ்.பி. இருவரும், சந்திரசேகர் கொடுத்த வாக்கு மூலத்தின்படி திம்மேகவுடுவின் மகன் ராமச்சந்திரனை குற்றவாளியாக சேர்த்தனர்.

இந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த மரப்பா மகன் ராமச்சந்திரன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த ஓசூர் நகர போலீசார், திம்மேகவுடு மகன் ராமச்சந்திரனுக்குப் பதிலாக, மாரப்பா மகன் ராமச்சந்திரனை குற்றவாளியாக வழக்கில் சேர்த்து, அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தளி தொகுதி எம்.எல்.ஏ. வாகவும் ஆகிவிட்ட ராமச்சந்திரன் அவரது அண்ணன் வரதராஜன் தலைமையிலான குழுவினர், அந்தப் பகுதியில் தொடர்ந்து பலரை வெட்டிப் படுகொலை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி என்கின்ற பழனிசாமி 2012 ஆம் ஆண்டு, ராமச்சந்திரன் மற்றும் வரதராஜன் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

கொளத்தூர் மணி தாக்கல் செய்த மனு!

இந்தநிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் காவல்துறை அலுவலர்கள் பலரும், தளி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இங்கே வழக்கு விசாரணை நடக்கும்போது, சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீதான கொலை வழக்கு விவரங்கள் அனைத்தையும் வாங்கி பார்வையிட்டது.

அதில் காவல் துறையினர் விசாரணை செய்ததிலும், சாட்சியங்களைப் பதிவு செய்து வழக்கு விசாரணை செய்த வகையில், பல குளறுபடிகள் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சாட்சி சந்திரசேகரன் கொல்லப்பட்ட வழக்கை, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மறு விசாரணை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ராமச்சந்திரனுக்கு பதில், அந்த ராமச்சந்திரன்

இந்த வழக்கை மறு விசாரணை செய்த கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சுந்தரம், தளி சட்டமன்ற உறுப்பினரான ராமச்சந்திரனை, சந்திரசேகர் கொலை வழக்கில் சேர்க்கப்படுவதற்கு பதிலாக மாரப்பா மகன் ராமச்சந்திரன் சேர்க்கப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தார்.

இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக அப்போதைய ஓசூர் காவல் ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் ஒசூர் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார். சந்திரசேகரன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் இருவரையும் குற்றவாளியாக சேர்த்து, கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

சேலத்துக்கு வழக்குகளை மாற்றிய உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் தளி ராமச்சந்திரனுக்கு எதிராக கொளத்தூர் மணி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “தளி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராமச்சந்திரன் மீதான வழக்குகளை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தக்கூடாது. மாவட்டத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் பெரும்பாலும் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வருகின்ற சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை வழக்கில், அரசுச் சாட்சியாக உள்ளவரையே கொலை செய்கின்றனர் என்ற காரணங்களை முன்வைத்து, எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீதான வழக்குகளை வேறு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீதான மூன்று கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளை, சேலம் மாவட்ட முதன்மை அமர்வு மற்றும் எம்.எல்.ஏ, எம்.பி.கள் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது..

சாட்சி சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

நீதிபதிக்கு பிடிவாரண்ட் Murder case Arrest warrant issued for judge

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓசூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.முத்துராஜ் , சாட்சி சந்திரசேகர் கொடுத்த மரண வாக்குமூலம் குறித்து சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164 பிரிவின்கீழ் சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த ஓசூர் விரைவு நீதிமன்ற நீதிபதி குமரவர்மன், கடந்த மார்ச் 26 ஆம் தேதி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இதுபோலவே தேன்கனிக்கோட்டை, உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராக இருந்து சாட்சிகளிடம் 164 பிரிவின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்திருந்த அப்போதைய நீதிபதி பி.சி.சாவித்திரி, மார்ச் 26ஆம் தேதி ஆஜராகி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைப்பாணை அனுப்பட்டிருந்தது.

ஆனால் மார்ச் 26 அன்று அவர் நீதிமன்றத்துக்கு வராததால், நேற்று 8.4.25 சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் சொல்லவேண்டும் என உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்றும் நீதிபதி பி.சி.சாவித்திரி நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, உத்தரவிட்ட நீதிபதி சுமதி, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தெலுங்கு சினிமாவை மிஞ்சும் திருப்பங்களோடு இந்த வழக்கு தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது!

Murder case Arrest warrant issued for judgeurder case Arrest warrant issued for judge

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share