யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் விடுதலை!

Published On:

| By Selvam

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணை மும்பை போலீசார் விடுவித்தனர்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிராவுக்கு வருகை தர உள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மும்பை போக்குவரத்து போலீஸாருக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

அதில், ”10 நாட்களில் உத்தரபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், கடந்த மாதம் துப்பாக்கியால் சுடப்பட்ட தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மும்பை போலீசார் மற்றும் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை நடத்திய விசாரணையில், தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஐடி பட்டதாரியான  பாத்திமா மிரட்டல் செய்தியை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு வயது 24 என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டதாக மும்பை காவல் உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

குமரி டூ திருப்பூர் வரை… எங்கெங்கு கனமழை?

ஐஸ்வர்யாவின் 51வது பிறந்த நாள்… கண்டுகொள்ளாத பச்சன் குடும்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share