“நாடு சிரிக்கும் 4 மாதங்கள்!” – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் முன் வைத்த 4 கேள்விகள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சற்று நேரத்தில் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் விஜயிடம் இந்த நான்கு கேள்விகளுக்கு பதில் உள்ளதா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “CM சார்…

ADVERTISEMENT

நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?

  1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
  2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
  3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
  4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?

தூயசக்தி என தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!” என விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share