பெண்களுக்கு எதிரான அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நடிகை மிருணாளினி ரவி கூறிய பதில் கவனம் பெற்றுள்ளது. mirunalini ravi’s easay way to escape from adjustment
அதிக புகழ் வெளிச்சம் உள்ள திரையுலகில், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. mirunalini ravi’s easay way to escape from adjustment
சமீபத்தில் ஆடிசன் சென்ற பெயரில் சின்னத்திரை நடிகையின் அட்ஜெஸ்ட்மெண்ட் வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் இந்த காஸ்டிங் கவுச்சிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஃபில்மிஜியான் யூடியூப் சேனலுக்கு அர்ஜுன் ரெட்டி பட புகழ் நடிகை ஷாலினி பாண்டே அளித்த பேட்டியில், ”நான் எனது உடை மாற்றும் போது திடீரென இயக்குனர் ஒருவர் கேரவனுக்குள்ளே வந்துவிட்டார். ஆனால் அவரை திட்டிவிட்டேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்து உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 132 வது ஆண்டு விழா 5 நாட்கள் நடைபெறுகிறது. அதன் முதல் நாள் நிகழ்வில் கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை மிருணாளினி ரவி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு மிருணாளினி ரவி கூறுகையில், ”மற்ற மாநிலங்களை விட தமிழ் திரையுலகம் நன்றாகவே இருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும். எனவே படித்து முடித்துவிட்டு, பொருளாதார ரீதியாக சுதந்திரம் இருந்தால், நம்மால் தெளிவான முடிவு எடுக்க முடியும். அதனால் தான் படித்து முடித்துவிட்டு திரையுலகிற்கு வரவேண்டும் என்கிறேன்.
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை, திரையுலகம் மட்டுமல்ல எல்லாத் துறையிலும் பல ஆண்டுகளாக உள்ளது. நாம் பொருளாதார ரீதியாக நிறைவாக இருந்தால் அல்லது போதுமென்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது.
எல்லாமே நம் கையில் தான் உள்ளது. நாம் இடம் கொடுக்காமல் இருந்தால், நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. அப்படி தான் நான் இருக்கிறேன்” என்று மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார்.
