மின்னம்பலம் EXIT POLL முடிவுகள் 2026: திமுக, அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படும் தொகுதிகள் எவை? தவெகவுக்கு 2-வது இடம் கிடைக்கும் தொகுதிகள் எவை?

By Mathi

|

Published on 29 Apr 2026, 10:34 PM

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி மின்னம்பலம் வெளியிட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை இன்று ஏப்ரல் 29-ந் தேதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) – 2-வது இடம் பிடிக்க வாய்ப்புள்ள தொகுதிகள்-10

தொகுதிதவெக வாக்கு (%)முன்னிலை பெறும் கூட்டணி
திருச்சி (கிழக்கு)35%திமுக கூட்டணி
வில்லிவாக்கம்32%திமுக கூட்டணி
ராயபுரம்32%திமுக கூட்டணி
அறந்தாங்கி31%திமுக கூட்டணி
எழும்பூர் (தனி)30%திமுக கூட்டணி
தியாகராயநகர்30%அதிமுக கூட்டணி
மயிலாப்பூர்29%அதிமுக கூட்டணி
காரைக்குடி27%திமுக கூட்டணி
கொளத்தூர்26%திமுக கூட்டணி
பாளையங்கோட்டை26%திமுக கூட்டணி

திமுக 3-வது இடம் பிடிக்கும் வாய்ப்புள்ள தொகுதிகள்

தொகுதிதிமுக வாக்கு (%)முன்னிலை பெறும் கூட்டனி
தியாகராயநகர்30%அதிமுக கூட்டணி
டாக்டர்.ராதாகிருஷ்ணன்நகர்29%தவெக
சேலம் மேற்கு28%தவெக

அதிமுக (ADMK) – 3-வது இடம் பிடிக்கும் தொகுதிகள்

தொகுதிஅதிமுக வாக்கு (%)முன்னிலை பெறும் கூட்டணி
ராயபுரம்30%திமுக கூட்டணி
திருச்செங்கோடு30%தவெக
ஆலங்குளம்30%சமநிலை
கோபிச்செட்டிபாளையம்29%தவெக
எழும்பூர் (தனி)28%திமுக கூட்டணி
அறந்தாங்கி28%திமுக கூட்டணி
வில்லிவாக்கம்26%திமுக கூட்டணி
திருச்சி (கிழக்கு)25%திமுக கூட்டணி
பாளையங்கோட்டை25%திமுக கூட்டணி
கொளத்தூர்22%திமுக கூட்டணி
பெரம்பூர்10%தவெக

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel