“இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது” : ரஜினியை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Kavi

நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர் வன்னி அரசு வாழ்த்து பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

விசிக சார்பில் சமூகநீதித் துறை அமைச்சராக வன்னி அரசு உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 3) நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார் அமைச்சர் வன்னி அரசு.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”வாழ்த்து… திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்”
என வாழ்த்தி அனுப்பினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினியை வன்னி அரசு சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share