சட்டப்பேரவைக்குள் செல்போன் கொண்டு வந்த அமைச்சர் : எச்சரித்த சபாநாயகர்!

Published On:

| By Kavi

சட்டப்பேரவைக்குள் அமைச்சர் ஷாஜகான் செல்போன் கொண்டு வந்த நிலையில், அவரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்துள்ளார். 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

ADVERTISEMENT

தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. 

இன்றைய தினம் தமிழ் தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பான அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

ADVERTISEMENT

அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை பேச அழைத்தார். 

அப்போது எழுந்து நின்று அவர் தனது செல்போனை பார்த்து தமிழ் மொழி தான் மூத்த மொழி என்று படித்துக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இதை கவனித்துக் கொண்டிருந்த சபாநாயகர், பேரவைக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று விதி இருக்கிறது. இனி இதுபோன்று எந்த உறுப்பினரும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். 

இந்த சூழலில் சட்டப்பேரவைக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று ஒரு அமைச்சருக்கு தெரியாதா என சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பகிரப்பட்டு வருகிறது

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share