எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் ஒன்றுதான்: அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

CBI investigation not requested in Kodanadu case

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் ஒன்றுதான் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் 21 சதவிகிதம் கடன் சுமை குறைந்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒவ்வொரு திட்டங்களையும் ஆய்வு செய்து மதிப்பீடுகளைக் குறைத்து சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் வருவாயை கூடுதலாக ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை நிதித்துறை அமைச்சர் துறைவாரியாக தெளிவாகச் சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

ADVERTISEMENT

மேலும், “திமுக ஆட்சிக்காலத்தில் வெள்ளநீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை, தவெக தாங்கள் செய்ததாகப் பெயர் வாங்குவதாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:

“இவை அனைத்தும் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழக்கமான நடவடிக்கைகளே. கடந்த ஆட்சியில் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை இந்த நான்கு மாதங்களில் விரைவாகச் செய்து வருகிறோம்” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “இதுபோன்ற செயல்பாடுகளைத் திமுக தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது. இது போன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். நாகரிகம் என்பது அரசியலில் முக்கியமான ஒன்று. திராவிட இயக்கத்தில் வந்த அவர்கள் அண்ணா வழியில், புரட்சித்தலைவர் வழியில் இன்று எப்படி நடைபெறுகிறதோ அதை போல கண்ணிமான பேச்சுக்கள் அமைவது காலத்திற்கேற்ப நல்லது” என்றார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், முதல்வர் குறித்து அவதூறாகப் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் வேறு அல்ல; இருவருமே அரசியலைப் பொறுத்தவரை ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share