மா விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்கத்தொகை : ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்திய தமிழக அமைச்சர்!

Published On:

| By Kavi

minister sakarapani meet central minister

மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். minister sakarapani meet central minister

இன்று (25.06.2025) டெல்லியில் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் சந்தித்து பேசினார்

ADVERTISEMENT

அப்போது ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2670.64 கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்கவும், நியாய விலைக் கடைகளில் எடைபோடும் இயந்திரத்தை கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்து பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிற்கும் வகையில் நடவடிக்கை எடுத்திடவும், இணைப்பு முறையை அமல்படுத்திட 31.03.2026 வரை கால நீட்டிப்பு வழங்கவும், தமிழ்நாட்டிற்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்கவும்,

தமிழ்நாட்டில் இருந்து 2024-25 காரிஃப் பருவக் கொள்முதல் அளவை 16 இலட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயர்த்திடவும் வலியுறுத்தி மனுவை வழங்கினார். அப்போது எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.62 கோடி கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்காக ரூ.31 கோடி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தொடர்பான முதலமைச்சரின் கடிதம் ஒன்றிய அமைச்சரிடம் வழங்கப்பட்டது” என்று கூறினார். minister sakarapani meet central minister

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share