மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம்? – ரகுபதி பதில்!

Published On:

| By Minnambalam

சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 21) வணிகவரித்துறை, போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், “அரசியலமைப்பு சட்டம் 51 AH பிரிவின் படி, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நம்முடைய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள். எனவே, அரசியலமைப்பு சட்டப்படி அவரவர் உரிமைகளை தான் அவர்கள் பாதுகாக்க முடியும். எனவே, எந்த சட்டத்தின் மூலமாகவும் எதையும் நாம் கொண்டு வந்து ஒன்றை தடுப்பதோ, அல்லது ஒன்றை பாதுகாப்பதோ இயலாத ஒரு காரியமாக போய்விடும்.

நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம், அதில் ஒன்றும் தவறில்லை. அதை மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற முயற்சி என்பது, ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்குமா என்பதை பார்த்து தான் சொல்ல வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “டாக்டர், சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இருந்தாலும், அமைச்சர் நல்ல விளக்கம் கொடுத்துவிட்டார்” என்று தெரிவித்தார். minister ragupathi clarifies superstitiousMinister Ragupathi clarifies superstitious

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share