நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை… திமுகவினருக்கு அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம்!

Published On:

| By Kavi

அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை திமுகவினர் உணர்கிறீர்களா? என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து நேற்று திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், சில தலைவர்கள் பேசியது கண்டனங்களை குவித்து வருகிறது. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இந்தசூழலில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ”மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா ஸ்டாலின் அவர்களே?

நேற்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?

ADVERTISEMENT

எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.

தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?

ADVERTISEMENT

திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா?

குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.

நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share