VIDEO: ‘தமிங்கிலீஷ்’ மரிய வில்சன் செம்ம ‘டென்ஷன்’! எகிறிய பிபி.. மைக்கை தள்ளிவிட்டு ஆவேசம்! அதிர்ந்த சட்டசபை!

Published On:

| By Mathi

Mariya Wilson

தமிழக சட்டசபையில் தாம் பேசுவதை கேலி செய்வதாக குற்றம்சாட்டி நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.

சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி திமுக எம்.எல்.ஏ. திமு ராசேந்திரன் பேசுகையில், “ நிதி அமைச்சர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் பல சொற்றொடர்களை அவர் பேசாமல் விட்டுவிட்டார்; சில சொற்றொடர்கள் இலக்கண பிழையாக அமைந்தது.

ADVERTISEMENT

இதை குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் நான் வைக்க விரும்பவில்லை. நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனது கட்சிக்காக வெகு சிறப்பாக வாதாடி பலம் சேர்க்கிறார் என்பதை நாங்கள் காண்கிறோம்.

நமது நிதி அமைச்சர், வரும் காலத்தில் அந்த பிழையின்றி பட்ஜெட் வாசிக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமேயானால் நீங்கள் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்று பணிவோடு நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

ADVERTISEMENT

என்ன கேலி பண்றீங்களா?

இதற்கு பதிலளித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: சார் நான் பாஸ்கெட்பால் பிளேயர் ஆக்சுவலா.. அஃபென்ஸா ஆடுவேன் டிஃபென்ஸா ஆடுவேன்… எப்ப டிஃபென்ஸ் ஆடணும் எப்ப அஃபென்ஸ் ஆடணும் எனக்கு ரொம்ப நால்லா தெரியும். நீங்க கத்துனீங்கன்னா நானும் கத்த முடியும்.

25 இயர்ஸா எஜுகேஷன் ஃபீல்ட்ல இருந்திருக்கேன்.. என்னோட கம்யூனிகேஷன் எல்லாம் இங்கிலீஷ்ல தான் இருந்திருக்கு.

ADVERTISEMENT

இந்த மாமன்றத்துல அவர் சொன்ன மாதிரி கொஞ்ச நாளாகவே உருவ கேலி பண்றது, பொதுவா சொல்றேன்.. ஜாதி ரிலேட்டடா பண்றது, பெண்கள் ரிலேட்டடா பண்றது.. இப்போ மொழி ரிலேட்டடா வந்துட்டாங்க…

பிறப்பால் கிறிஸ்தவன்

அன்பு மொழி; அமைதி மொழி; இரக்கத்தின் மொழி; செயல் செயல் மட்டும் சொல்லிட்டு இருக்காரு எங்கள் தலைவர்.. எனக்கு ஒரு மொழியை என்னோட கிறிஸ்டியானிட்டி கத்துக்கொடுத்திருக்கு.. இதை பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிள் படிச்சிருக்கேன்… நான் பார்ன் கிறிஸ்டியன்; உங்களுக்கு அந்த மொழிதான் வேணும்னா…

கடந்த 75 நாட்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துறை ரீதியாக நிறைய மீட்டிங் வச்சிருக்காங்க.. அது ரிலேட்டடா சில ரிஃபார்மேஷன் பண்ணிருக்கோம்.. நிறைய ரிஃபார்மேஷன் பண்ணிருக்கோம்..

இப்போ கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா 70 நாட்கள் முன்னாடி நடந்திருந்தது.. இப்ப இருக்கிற நிலைமை என்டையர் இஸ் டிஃபரண்ட். கிட்டத்தட்ட 15000 கோடி ரூபாய் டிரஷரிக்கு வந்திருக்கு.

15000 குரோர்ஸ்.. 65 டேஸ்ல மட்டும்… இது ஈஸி கிடையாது… இது வெரி ஈஸி கிடையாது. இது பிகாஸ் ஆப் தி என்டையர் எஃபர்ட் ஆப் தி மினிஸ்ட்ரி…

அதை விட்டுட்டு அதெல்லாம் பார்க்காம நான் உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கிறேன்… நீங்க தமிழ்ல எப்படி பேசி… எனக்கு யூனிக் இப்படித்தான் பேச முடியும்… அக்சப்ட் பண்ணா அக்சப்ட் பண்ணுங்க… நான் உங்களுக்காக நான் சேஞ்ச் பண்ணிக்க முடியாது.. பெரிய கைடன்ஸ் பார்த்த மாதிரி பண்ணக்கூடாது. ஏன் ஸ்டைல் இதுதான்.. அவருக்காக நான் மாத்திக்க முடியாது.. எல்லாருக்கும் ஆக நான் மாத்திக்க முடியாது. கேலி பண்றீங்களா?. இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாக பேசினார்.

வீடியோ

பேரவையில் வெடித்த விவாதம்... எச்சரித்த மரியா வில்சன் | Bussy Anand | MarieWilson | EVVelu |TVK |DMK
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share