மெசேஜுக்கே மசாஜா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நேத்துல இருந்து பக்கத்து வீட்டு அக்கா மெசேஜ் வருதா மெசேஜ் வருதானு பாத்துகிட்டே இருந்தாங்க. திடீர்னு மெசேஜ் வந்துருச்சு. கடைசி ஓவர்ல சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி அக்காவோட வீட்டுக்காரர் கத்தினாரு. வா புள்ள உனக்கு மசாஜ் பண்ணி விடுறேன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. மாசம் ஆயிரம் ரூபாய் வரதுக்கு அறிகுறியா இந்த பத்து பைசா மெசேஜ் வந்திருக்கு.

நேத்து வரைக்கும் அம்மா வீட்டுக்கு போடினு சண்டை போட்டுட்டு… இந்த மெசேஜு பாத்ததும் மசாஜானு அந்த அக்கா கிண்டல் பண்ண… அதுக்கு மேல நமக்கு என்ன வேலைன்னு நான் கிளம்பி வந்துட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க…

கடைநிலை ஊழியன்
டேய் september.. இப்ப தான்டா வந்த.. அதுக்குள்ள 13 நாள் முடிஞ்சுட்ட..
கொஞ்சம் மெதுவா போனா தான் என்னவாம்..
balebalu
என்னங்க இது
இவ்வளவு பெரிய காலி கிரவுண்டுல நீங்க மட்டும் உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க ? அடுத்த வருஷம் எப்படியும் இங்க ஒரு concert நடக்கும்
அதுக்கு இப்போவே இடம் பிடிச்சு வைக்கலாம் ன்னு …


ச ப் பா ணி
கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு ?
Dr. M. A. N. Loganathan
மொலாளி டிக்கெட்டக் கொண்டாந்தா அமவுண்ட் ரீபண்ட் பண்றம்ன்னு சொன்னம்ல மொலாளி,ஒரு லட்சம் பேர் வந்திருக்கானுங்க…
அடேய் வித்ததே நாப்பத்தையாயிரம்தாண்டா..
ARR CONCERT CHENNAI


Mohan Raj
சம்பளம் உயர்தி கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test!
Q: நீ flightல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு, அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
A: 49 இருக்கும்.
Q: ஒரு யானையை எப்படி 3 Stepல் fridgeக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல அது என்ன?
A: மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
Q: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.?
A: தாரளமா கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.
Q: ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்கஎப்படி?
A: குளத்தில் மூழ்கிட்டாங்க.
Boss: அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு.
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க, இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..
ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்.
நீதி- கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது.!


கடைநிலை ஊழியன்
மச்சான் டிக்கெட் புக் பண்ணிட்டியா.. ?
ஒரு படமும் வரலையே..
எது படமா.. பொங்கலுக்கு ஊருக்கு போக ட்ரைன் டிக்கெட் புக் பண்ணிட்டியா னு கேட்டேன்.. எப்ப பாரு சினிமா சினிமா திரிய வேண்டியது..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆப்பிள் ஐபோன் 15 விலை ₹80,000 ன்னா, ஒரு போனோட விலை 5,333 தானே..? இந்தாங்க காசு.. எங்க அண்ணன் ஒரு போன் வாங்கிட்டு வர சொன்னாரு..
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
இந்தியா,பாரத் இரண்டும் ஒன்றுதான்… எங்களுக்கு பிரச்சினை இல்லைன்னு ராகுல் சொல்லிட்டாரு…மோடிஜி இப்ப இந்தியாவுக்கு என்ன பேரு வைப்பாருன்னு கேட்கிறாம்பா…

“சிரிப்பும்,சிந்தனையும்”
*பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் திருமணத்திற்கு முன்பு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்தி மொய்யை கலக்ட் பண்ணிராய்ங்க… ஆனால், ஆண் பிள்ளையை மட்டும் பெற்றவர்கள் அது மாதிரி விசேஷம் எதுவும் வைக்க முடிவதில்லை. ஆகவே தான் நம்மாளு அடிச்சான் பாருங்க “வேட்டி அணியும் விழா’ன்னு… இனி அடுத்தடுத்து கைலி அணியும் விழா, முழு பேண்ட் அணியும் விழா என்று தொடரலாம்

May be an image of text that says "வேட்டி அணியும் விழா அழைப்பிதழ் அன்புடையீர்... நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம், 07- ஆம் தேதி (24.09 (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வசிக்கும் திரு. S.வெங்கடேஷ்- ஹரிப்பிரியா வெங்கடேஷ் அவர்களின் புதல்வன் V. வெங்கடவினய் க்கு வேட்டி அணியும் விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் மாமல்லபுரம் வெண்புருஷம் சாலை, ஐந்து ரதம் அருகில் அமைந்துள்ள ٧٧ Convention Center ல் நடைபெறும் விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்திட அன்புடன் அழைக்கின்றோம். அழைத்து மகிழும் S.வெங்கடேஷ்- ஹரிப்பிரியா வெங்கடேஷ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா வெங்கமே சப்ளையர்ஸ். மாமல்லபுரம்."

லாக் ஆஃப்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நான்கு மசோதாக்கள் தாக்கலாகிறது!

கலைஞர் மகளிர் உரிமை தொகை: மேல்முறையீடு செய்வது எப்படி?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share