இல்லம் தோறும் ரகுமான்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு டீ குடிக்க போனப்பவும் ஏ.ஆர்.ரகுமான் பத்திதான் பேச்சு, அவரோட பாட்டை தான் இதுவரைக்கும் கேட்டிருக்கோம். ரகுமானை வச்சே எல்லாரும் இன்னிக்கி ட்யூன் பண்ணிக்கிட்டிருக்காங்க. ‘என்கிட்ட சரியான ஐடியா இருக்கு’ அப்படின்னாரு நம்ம தம்பி.
என்னனு கேட்டேன். ‘இப்போதைக்கு சென்னையில உலகத் தரத்துல ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட் நடத்துற அளவுக்கு ஆடிட்டோரியம் எல்லாம் வராது. அதனால, டிக்கெட் வாங்குனவங்க அட்ரசை கேட்டு அவங்க வீட்டுக்கே போய் ரகுமான் பாடிட்டு வர்றதுதான் முறை. மறக்குமா நெஞ்சம் போல, இதுக்கு இல்லம் தோறும் ரகுமான்’னு பேர் வைக்கலாம். போலீஸ் பர்மிஷன் எதுவும் தேவையில்லை’ அப்படினு சீரியசா சொன்னாரு.
நீங்க அப்டேட் பாருங்க


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நாங்கதான் ‘மறக்குமா நெஞ்சம்..’ன்னு கான்சர்ட் பேர்லயே ஹின்ட் வைச்சமே..
இது சிக்னலோட code word டா..? எனக்கு புரியலையே.. நீங்க சொன்ன டைட்டிலுக்கு அர்த்தம் இப்ப தான்டா புரியுது..

ADVERTISEMENT


கடைநிலை ஊழியன்
ஒரே depression னா இருக்கு னு concert ‘க்கு போனேன்..
depression குறைஞ்சுருச்சா..
இல்ல depression கூடிருச்சு..


ℳsd ❝இதயவன்❞
பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பே இல்லை- ராகுல் காந்தி ~
காங்கிரஸ்க்கும் ஒற்றுமைக்கும் தொடர்பே இல்லாத மாதிரி?!

ADVERTISEMENT


Mannar & company
எவ்வளவு தைரியமான ஆளாக இருந்தாலும் இருட்டைக் கண்டால் சின்ன பயம் வரும்,
அதுபோல்தான் திங்கட்கிழமையும்!
balebalu
ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர் -செய்தி
துணியை கட்டி குடிசைகளை மறைச்ச மாதிரி மேகத்தை மறைக்காம போயிட்டீங்களே ஆபீசர்


உள்ளூராட்டக்காரன்
இருந்தாலும் இந்த மனுசன் இப்படி ஏமாத்துவார்னு நினைக்கல
யாரை திட்டுறீங்க…ரஹ்மானா வெற்றிமாறனா?
என் மாமனார…

ADVERTISEMENT

ஷிபின் Shibin
மறக்குமா நெஞ்சம் குளறுபடியை விசாரிக்க டிஜிபி உடனடி உத்தரவு .
அந்த வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவனை கண்டுபிடிச்சிட்டீங்களா ?

ℳsd ❝இதயவன்❞
நடிகா் சங்கத்துக்கு விரைவில் பிரம்மாண்ட கட்டடம்: நடிகா் விஷால்
அன்னைக்கு காலையில 6 மணி இருக்கும் ரீப்பீட்டு?!

லாக் ஆப்

விழுப்புரம்: மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்தியதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இந்தியா இலக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share