பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இந்தியா இலக்கு!

Published On:

| By Selvam

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இலங்கை கொழும்பில் உள்ள பிரமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கிறனர். இருவரும் அதிரடியாக ஆடினர்.

ரோகித் சர்மா 56 ரன்களில் சாதப் கான் பந்துவீச்சில் பகீம் அஷ்ரபிடம் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 58 ரன்களில் ஷாகீன் அஃப்ரிடி பந்துவீச்சில் சல்மான் அலி அக்ஹாவிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

இதனை தொடந்து களமிறங்கிய விராட் கோலி, கேல் ராகுல் ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஆட்டம் 3 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததன் காரணமாக சற்று தாமதமாகவே ஆட்டம் துவங்கியது.

ஆட்டம் துவங்கியது முதல் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் இருவரும் சதமடித்து அசத்தினர். ஆட்ட நேர முடிவில் இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 122 ரன்களுடன், கேல் ராகுல் 111 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

செல்வம்

உதயநிதிக்கு எதிராக எடப்பாடி வழக்கு!

“இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை” – தாம்பரம் காவல் ஆணையர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share